×

ஆட்டோ கவிழ்ந்து விபத்து காயமடைந்தவர்களுக்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்

நிவாரணம் வழங்க ஏற்பாடு
பழநி, டிச.30: பழநி அருகே மினிஆட்டோ கவிழ்ந்து படுகாயமடைந்த விவசாய கூலித்தொழிலாளர்களை ஐபி செந்தில்குமார் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்பழநி அருகே ஆயக்குடியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் தேவத்தூரில் விவசாயப்பணிக்காக மினிஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூகாம்பிகை கோயில் அருகே மினிஆட்டோ கவிழ்ந்தது. இதில் மினிஆட்டோவில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மற்றவர்கள் பழநி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து எடுத்துரைத்தார். உரிய சிகிச்சைகள் அளிக்குமாறு மருத்துவர்களிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினார். எம்எல்ஏவை பார்த்த காயமடைந்த பெண்கள் சிலர் கதறி அழுதனர். வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக புலம்பினர். காயமடைந்தவர்கள் விவசாய கூலித்தொழிலாளர்களாக இருப்பதால் அவர்களின் காயத்தின் தன்மைக்கேற்ப நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவதாகக் கூறிச் சென்றார். ஆயக்குடி திமுக பேரூர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சிவஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : MLA ,victims ,accident ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...