×

வாலிபரை தாக்கியவருக்கு வலை

திருபுவனை, டிச. 30: திருபுவனை பாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மகன் வெற்றிவேல் (23). இவர் சன்னியாசிகுப்பம் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெற்றிவேல் நேற்று முன்தினம் வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவரை பைக்கில் ஏற்றி வந்துள்ளார். திருபுவனை பழைய ஆயில் மில் அருகே வந்தபோது, திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்த திவாகர் (25) குடிபோதையில் வழிமறித்து வெற்றிவேலிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார்.

இதில் காயம் அடைந்த வெற்றிவேல் திருபுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து திவாகரை தேடி வருகிறார்.

Tags : attacker ,
× RELATED பந்தலூர் அருகே யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி