×

விபத்துக்களை எதிர்கொள்வது எப்படி? ரசாயன தொழிற்சாலையில் ஒத்திகை

காரைக்கால், டிச. 30:  காரைக்கால் மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை இணைந்து அபாயகரமான தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை  நடத்தியது. காரைக்கால் அடுத்த கீழவாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மத்தியில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.  தொழிற்சாலையில் எத்திலின் ரசாயன திரவம் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது போன்றும், அதனை தொடர்ந்து துணை கலெக்டர் ஆதர்ஷ் (வருவாய்), துணை கலெக்டர் பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை) தொழிற்சாலை ஆய்வாளர் செந்தில்வேலன் ஆகியோர் பார்வையிட்டு அவசரகால தயார்நிலை திட்டத்தை செயல்படுத்த தொழிற்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து தொழிற்சாலையில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டதுமேலும்  தீயணைப்பு துறை தீயை கட்டுக்குள் கொண்டு வருவது, பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு செல்வது, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற  ஒத்திகை நடத்தப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அவசரகால சிறப்புக்குழுக்களான தீயணைப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறையிலிருந்து அதிகாரிகள்  தொழிற்சாலை விபத்து மற்றும் அதனை முடிவுக்கு கொண்டு வரும் செயல்பாடுகளை ஆய்வு செய்து  அவசரகால திட்டத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கியது.

Tags : accidents ,Rehearsal ,chemical factory ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...