×

டிஆர்இயூ தொழிற்சங்கம் எதிர்ப்பு பெத்தனாட்சிவயல் கிராமத்தில் 2 மாதங்களில் அடிப்படை வசதி செய்யப்படும்

சேதுபாவாசத்திரம், டிச. 30: தினகரன் செய்தி எதிரொலியால் பெத்தனாட்சிவயல் கிராமத்தில் ஆய்வு செய்து 2 மாதத்தில் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் உறுதியளித்தார். சேதுபாவாசத்திரம் அடுத்த ஊமத்தநாடு ஊராட்சியில் பெத்தனச்சிவயல் கிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 250 வாக்காளர்கள உள்ளனர். இந்த நூற்றாண்டிலும் கிராமத்தில் இன்றைய நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. இங்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான குடிநீர், வீடு, மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு மனை பட்டா கிடையாது. இந்த நிலங்கள் அனைத்தும் மேய்ச்சல் தரிசு என கூறப்படுகிறது. இதனால் 50 முதல் 100 ஆண்டுகள் வரை குடியிருந்து வரும் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு மறுத்து வருகிறது.

சொந்த பட்டா இல்லாததால் மின் வினியோகம் பெற முடியவில்லை. அதேபோல் அரசு கட்டி கொடுக்கும் தொகுப்பு வீடு மற்றும் பிரதம மந்திரி வீடுகள் பெற முடியவில்லை. குடிநீரை பொருத்தவரை இங்குள்ள மினிடேங்க் இயங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அருகில் உள்ள காட்டாற்றில் ஊற்று தோண்டி அதிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்துவதாக கூறுகின்றனர். இங்கு வசித்து வரும் மக்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகள் இருந்தும் அடிப்படை வசதி கிடையாது. இங்குள்ளவர்கள் ஒரு சிலர் மீன் பிடி தொழிலும் மற்றவர்கள் விவசாய கூலி வேலையும் செய்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள 100 குழந்தைகளில் பேர் மட்டுமே படிக்கின்றனர். மற்ற குழந்தைகள் அனைத்தும் ஆடு, மாடு மேய்க்கின்றனர். சில குழந்தைகள் வீட்டில் இருக்கின்றனர்.

எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் இங்கு வேட்பாளர்கள் படையெடுக்க தொடங்கி விடுவர். அப்போது வீட்டுமனை பட்டா, மின்சார வசதி, குடிநீர் வசதி என வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் இங்கு வரக்கூட மாட்டார்கள். இனிமேல் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாவது எங்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்துவார்களா என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மாலை பெத்தனாட்சிவயல் கிராமத்தில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது இந்த கிராமத்தின் அடிப்படை தேவைகள் அனைத்தும் 2 மாதத்தில் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆய்வின்போது பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) ரமேஷ் உடனிருந்தனர். இதையடுத்து கிராமத்தை ஆய்வு செய்த கலெக்டருக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : union ,TREU ,village ,anti-Bethanyarivali ,
× RELATED கொள்ளிடம் அருகே சேத்திருப்பு...