×

ஐயப்பன் கோயில் திருவிளக்கு ஊர்வலம்

ஈரோடு, டிச. 29:  ஈரோடு ஐயப்பன் கோயில் திருவிளக்கு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
 ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகே ஐயப்பா சேவா நிறுவனத்தின் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை, படிபூஜை நடக்கும் போது, இந்த கோயிலிலும் அதேபோல் விசேஷ பூஜை நடைபெறும். இந்த ஆண்டும் சபரிமலை நடை திறக்கப்பட்டது முதல், ஈரோடு ஐயப்பன் கோயிலிலும் தினமும் அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு ஊர்வலம் நடந்தது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் முன்பு தொடங்கிய ஊர்வலத்தில், சுவாமி ஐயப்பன் பதினெட்டாம்படியுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  இதில், கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏந்தியபடி, சுவாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷமிட்டு ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர். இந்த ஊர்வலமானது, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் துவங்கி, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, காவேரி ரோடு, கருங்கல்பாளையம் வழியாக கோயிலில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ் நகர், மரப்பாலம், கோட்டை பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ayyappan Temple Carnival Procession ,
× RELATED கோபியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை