×

பணகுடி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

பணகுடி, டிச.29: பணகுடி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகை மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கடந்த 28ம்தேதி ஆவரகுளத்தைச் சேர்ந்த எல்ஐசி முகவர் ஜெயந்தி என்பவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்மநபர்கள் அவரை மிதித்து தள்ளி அவரிடம் இருந்து 15 பவுன் நகையை பறித்து சென்றனர்.  இதுகுறித்து வழக்குபதிவு செய்து பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் எஸ்ஐக்கள் ஆண்டோ பிரதீப், பழவூர் அருண்ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மேலப்பாளையம் கருங்குளத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகன் பட்டமுத்து(19), லெவிஞ்சிபுரம் 2வது தெரு வேல்சாமி மகன் மாரிசெல்வம்(20), வீ.கே.புதூர் அச்சங்குன்றம் சுப்பையா மகன் ராமராஜ்(19), கூடங்குளம் வைராவிகிணறு சின்னதுரை மகன் அஜித்குமார்(21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகை மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த 2 பைக்குகளையும் போலீசார் கைப்பற்றினர்.

இதில் அஜித்குமார் சிறையில் இருந்தபோது மற்ற மூவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளதும் பணகுடி, காவல்கிணறு, பழவூர், ஆவரைகுளம், வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில்  கடந்த 4,5 மாதங்களாக  தனியாக வருபவர்களை பின்தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  கடந்த 2ம்தேதி 15 பவுன் நகை பறிப்பில் சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் பழைய வழக்குகள் தொடர்பாக கண்காணித்த போது இவர்கள் 4 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான 4 பேரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : persons ,raid ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...