×

வேப்பனஹள்ளியில் வாக்கு எண்ணும் மையம் தயார்

வேப்பனஹள்ளி, டிச.27:  வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றங்கள், மற்றும் 15 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 222 ஊராட்சி வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகியவற்றிற்கான தேர்தல் வருகின்ற 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 149 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்குகளை எண்ணுவதற்காக, வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வருகிற 2ம் தேதி நடைபெற உள்ளது.

Tags : Voting ,Counting Center ,Veppanahalli ,
× RELATED பஸ்கள் நிறுத்தப்பட்டதால்...