×

அரூர் அருகே பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

அரூர், டிச.27:  அரூர் அருகே பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் ஒன்றியம் மாம்பட்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிப்பிட வசதி இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2011-12ம் ஆண்டு, இப்பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது தண்ணீர் வசதி இல்லாததால், கடந்த 3 ஆண்டுகளாக பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால், இப்பகுதியை ேசர்ந்த பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தண்ணீர் வசதி ஏற்படுத்தி, மீண்டும் மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : boutique health complex ,Arur ,
× RELATED விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி