×

கலெக்டர் தகவல் முத்துப்பேட்டையில் சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டது

முத்துப்பேட்டை, டிச.27: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று தெளிவாக சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது, சூரியன் - சந்திரன் - பூமி ஆகிவை ஒரே நேர்க்கோட்டில் வருவதால் ஏற்படும் சூரிய கிரகணம் நேற்று தோன்றியது. இதில் பூமியும், சந்திரனும் சூரியனுக்கு நேராக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறைத்து பூமியில் விழாதபடி மறைக்கும் என்றும், அப்பொழுது சூரியனின் விளிம்பு பகுதி வெளியில் தெரியும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிறத்துடன் கூடிய வட்ட வடிவ வளையம் தோன்றும். பிறகு நகர நகர பிறை வடிவிலும் மாறும். இதுவே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை சென்னை ஆகிய மாவட்டங்களில் சூரிய கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அந்த நிகழ்வுகள் அனைத்தும் தெளிவாக தெரிந்தது. முன்னதாக முத்துப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் வானம் இருண்ட நிலையில் மேகம் சூழ்ந்து காணப்பட்டு லேசான தூரல் போட்டது. பின்னர் சூரிய கிரகணம் தோன்றும் நேரம் முழுவதும் மேகங்கள் சூரியனை மறைத்தவாறு இருந்தது. அந்த கருமேகங்களை மீறி சூரியனின் வெளிச்சம் பீறிட்டுக் காணப்பட்டது. மேகங்கள் நகர.. நகர.. வெளிச்சம் வீடியோ கேமராவிற்கு பொருத்தப்பட்ட பிளாஸ் போன்று சாலையில் அடித்துக்கொண்டே இருந்தது. பின்னர் வெளிச்சம் தெரிவதும்,

பின்னர் மேகங்கள் மறைப்பதுமாக வானத்தில் வர்ணஜாலம் காட்டியது. மக்கள் வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் இதனை மக்கள் வெறும் கண்ணாலும் பார்த்து ரசித்தனர். அதனை தொடர்ந்து சூரிய கிரகணம் தோன்றியபோது ஆய்வறிக்கை கூறியது போன்று சூரியனை சுற்றி சிவப்பு நிறத்துடன் கூடிய வட்ட வடிவ வளையம் தோன்றும், பிறகு நகர நகர பிறைவடிவிலும் தௌ்ளத்தெளிவாக காண முடிந்தது. இந்த காட்சிகளை ஏராளமானவர்கள் மூக்கு கண்ணாடிகள் மற்றும் பிரத்யோக கண்ணாடிகள் வாயிலாக சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.

Tags :
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 22ம் தேதி திருவிழா துவக்கம்