×

பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் திமுக, கூட்டணி வேட்பாளர்களுக்கு எம்எல்ஏ ரகுபதி வாக்குசேகரிப்பு

பொன்னமராவதி, டிச.27: பொன்னமராவதி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருமயம் எம்எல்ஏ ரகுபதி வாக்குகள் சேகரித்தார். பொன்னமராவதி ஒன்றியத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, சுதா அடைக்கலமணி, தனலெட்சுமிஅழகப்பன், சிவரஞ்சனிவினோத், மாணிக்கம், பிரியங்கா, ராதா, சக்திவேல், விஸ்வநாதன், ஆதிலெட்சுமி, விஜயா, கல்யாணி, ராசலெட்சுமி, காங்கிரஸ் கதிரவன் உட்பட 16 ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் மீனாட்சி மணிகண்டன், பொன்னழகு, உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருமயம் தொகுதி எம்எல்ஏ ரகுபதி வாக்குகள் சேகரித்தார்.

ஒன்றிய பகுதிகளான சித்தூர், நல்லூர், அரசமலை, காரையூர், ஆலம்பட்டி விளக்கு, கீழத்தானியம், மேலத்தானியம், முள்ளிப்பட்டி, ஒலியமங்களம், சடையம்பட்டி, இடையாத்தூர், மரவாமதுரை, நகரப்பட்டி, கல்லம்பட்டி, அம்மன்குறிச்சி, ஆலவயல், கண்டியாநத்தம், மைலாப்பூர், பகவாண்டிப்பட்டி, வார்பட்டு ,கருப்புக்குடிப்பட்டி, திருக்களம்பூர்,வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி,தொட்டியம்பட்டி, இந்திராநகர், வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி, காட்டுப்பட்டி, மணப்பட்டி, கொப்பனாபட்டி, தேனூர், கொன்னைப்பட்டி, மேலமேலநிலை, சுந்தரம், செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி ஆகிய இடங்களில் வாக்குகள் சேகரித்துப் பேசினார். இதில் முன்னாள் எம்எல்ஏ, ராம.சுப்புராம், தலைமை செயற்குழுஉறுப்பினர் ஜெயராமன், நகர செயலாளர் அழகப்பன், மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், தேனிமலை, மணி, நாகராஜன், நிர்வாகிகள் விஜயகுமார், ராமன், சாமிநாதன், சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Raghupathi ,DMK ,coalition candidates ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்