×

மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்


மதுராந்தகம்: மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், நீர் மோர் ஆகியவற்றை வழங்கினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், திமுக சார்பில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுராந்தகம் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி காந்தி சிலை அருகில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் குமார் அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு மோர், திராட்சை, ஆரஞ்சு பழச்சாறு, தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்கள், வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார். இதில், 500க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் கடும் கோடை வெயில் நிலவும் இந்த நேரத்தில் பழங்கள் மற்றும் பழச்சாறு வாழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நல அணி மாவட்ட அமைப்பாளர் நூருல் அமித், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் ராஜேஷ், நகர நிர்வாகிகள் கேசவன், பரணி, மூர்த்தி, கிருஷ்ணன், சங்கர், ராஜா, ஏழுமலை, குருமூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,Madhurandakam ,MLA ,Sundar ,Maduraandakam ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது