×

குடியாத்தம் பகுதிகளில் கடந்தாண்டைவிட ஆய்வு செய்த எஸ்பி தகவல்

குடியாத்தம், டிச.27: குடியாத்தம் பகுதிகளில் கடந்தாண்டைவிட இந்தாண்டு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது என்று ஆய்வு செய்த எஸ்பி பிரவேஷ்குமார் தெரிவித்தார். குடியாத்தம் போலீஸ் சப் டிவிஷனுக்கு உட்பட்ட குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வேலூர் எஸ்பி பிரவேஷ் குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கையொப்பமிட்டார். குடியாத்தத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை, சிசிடிவி கேமரா பொருத்துதல், மக்களுக்கும் போலீசாருக்கும், நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் நகர 36வது வார்டு, 6 வருவாய் கிராமங்களில் போலீஸ் சார்பில் குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்படுவது குறித்து குடியாத்தம் டிஎஸ்பி சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் கேட்டறிந்தார்.

பின்னர் எஸ்பி பிரவேஷ்மார் நிருபர்களிடம் கூறியதாவது: குடியாத்தத்தில் கடந்தாண்டுகளில் வீடு புகுந்து திருடியதாக 52 வழக்குகள் உள்ளது. இந்தாண்டு இந்தக் குற்றங்கள் குறைந்து 18 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி , கல்லூரி வளாகங்களில் அதிகளவு மரக்கன்று நடப்படும். குடியாத்தம் நகரில் 5 பள்ளிகளில் மாணவர் காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதியவர்கள், நோயாளிகளுக்கு உதவி செய்து, மது ஒழிப்பு பிரசாரம், போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : SP ,areas ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை