×

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும், 30ம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வாக்களிக்க வசதியாக தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும்

வேலூர், டிச.27: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இன்று 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து தொழில் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இன்று 27ம் தேதியும், வரும் 30ம் தேதியும் என இரண்டு நாட்கள் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நசிமுதீன் உத்தரவின் பேரிலும், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் மனோகரன் அறிவுறுத்தலின்படியும் வேலூர் முதல் கோட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் முகம்மதுகனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இன்று 27ம் தேதியும், வரும் 30ம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. அந்த இரண்டு நாட்களிலும் அந்தந்த பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்கள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் புகார்கள் ஏதும் இருப்பின் 0416-2254575 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai district ,industrialists ,elections ,
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...