×

பட்டிவீரன்பட்டி பகுதியில் தடையை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு அதிகரிப்பு பழநியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு

பழநி, டிச. 25: பழநியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பழநியாண்டவர் கல்லூரி வளாகத்தை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் வரும் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்பின் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். வரும் ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களை தயார் செய்யும் பணியில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான வாக்கு பெட்டிகள் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வைக்கப்படவுள்ளது.

ஜனவரி 2ம் தேதி வாக்குகள் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் எண்ணப்படும். இக்கல்லூரியின் வளாகத்தை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு பெட்டி வைக்கும் அறைகளின் பாதுகாப்பு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனுமதிக்க வேண்டிய பகுதிகள், வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்படும் பரபரப்பான சூழ்நிலைகளை கையாள மேற்கொள்ளப்பட உள்ள விதம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது பழநி சப்.கலெக்டர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலையான், நாகராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கோடைவிழாவையொட்டி கொடைக்கானலில் மீன்பிடி போட்டி