×

கோடைவிழாவையொட்டி கொடைக்கானலில் மீன்பிடி போட்டி

 

கொடைக்கானல், மே 25: கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி, சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் நடந்த மீன் பிடிக்கும் போட்டிகள் நேற்று கொடைக்கானல் ஏரியில் நடைபெற்றது. குறைந்த நேரத்தில் அதிக எடை உள்ள மீன்களை யார் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

நேற்று கொடைக்கானலை சேர்ந்தவர்கள் விரைவாக மீன்களை பிடித்தனர். குறைவான நேரத்தில் அதிக எடை உள்ள மீன்களை பிடித்து கொடைக்கானலை சேர்ந்த செல்வம் பிடித்து முதல் பரிசு, பாண்டி 2ம் பரிசு, சவுந்தர் 3ம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு கொடைக்கானல் சுற்றுலாத்துறை அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காயத்ரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பரிசளிப்பு விழாவில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், ஆய்வாளர் இந்துமதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோடைவிழாவையொட்டி கொடைக்கானலில் மீன்பிடி போட்டி appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Department of Tourism and Fisheries ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை