×

தங்கம், வெள்ளி, கரன்சிகளும் இருந்தன தென்னூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்

திருச்சி, டிச.25: திருச்சி மாநகராட்சி தென்னூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு நேரத்திற்கு வராத 2 நகர்ப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஒரு செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரு மருத்துவ அலுவலர், நான்கு செவிலியர்கள், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர், நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

பிரதிவாரம் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி தாய்மார்களின் பரிசோதனை நாள். மருத்துவ சேவைகளை வலுப்படுத்தும் விதமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24x7 என்ற முறையில் செயல்பட்டு மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை அவர்களுக்கு உகந்த நேரத்தில் வழங்கிடவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பினை கண்டறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய காத்திருப்பு நேரத்தை தவிர்க்கவும், அம்மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை குறைத்திடவும், மாநகராட்சிக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் (இ.பி ரோடு, எ.புதூர், காட்டூர், சுப்பிரமணியபுரம் மற்றும் உறையூர்) மையங்களில் பல்துறை மருத்துவ சேவைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை குறிப்பிட்ட சிறப்பு மருத்துவரால் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி மாநகர நல அலுவலர் தென்னூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று காலை 9 மணிக்கு திடீர் ஆய்வு செய்தார். அப்போது 2 நகர்ப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஒரு செவிலியர் பணிக்கு வரவில்லை. பின்னர் அவர்கள் தாமதமாக வந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இவர்களின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வந்து பொதுமக்களுக்கு சேவை செய்யும்படி மருத்துவர் மற்றும் இதர பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Tags : Thennur Urban Primary Health Center ,
× RELATED திருவெறும்பூர் அருகே தீப்பாஞ்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்