×

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரம் காதுகளை பிளக்கும் வாக்காள பெருமக்களே...

புதுக்கோட்டை, டிச. 25: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளால் எங்கு பார்த்தாலும் வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை ஸ்பீக்கர் சத்தம் காதை பிளக்கும் வகையில் உள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டகளாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறும். குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடிதத்துள்ளது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்து வருவதால் அனைத்து வேட்பாளர்களும் வேன், கார், ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி தத்துவ பாடல்களை ஒலிக்கவிட்டப்படி வாக்கு கேட்டு வருகின்றனர். குறிப்பாக வாக்காள பெருமக்களே என்று தொடங்கி, வேட்பாளர் பெயர், தேர்தல் நாள், கட்சி, கட்சியின் தலைவர் பெயர், வாக்களித்தால் செய்யபடும் திட்டங்கள் அடங்கிய தொகுப்பாக ஸ்பீக்கரில் இருந்து சத்தம் வருகிறது. மேலும் இடையே இடையே கட்சியின் பாடல்கள் ஒலிக்க விடப்படுகிறது. சுயேட்ச்சை வேட்பாளர் என்றால் தெம்மாங்கு பாடல்கள், சினிமா பாடல்கள் ஒலிக்கவிடப்படுகிறது. இதே பிரச்சாரம் நாள் முழுக்க ஒரு கிராமத்தை சுற்றி சுற்றி வருவதால் ஒரே ஸ்பீக்கர் சத்தமாக கேட்கிறது. குறிப்பாக ஒரு தலைவர், கவுன்சிலர் பதவிக்கு 3 முதல் 8 பேர் வரை போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஸ்பீக்கர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் எங்கு பார்த்தாலும் ஸ்பீக்கர் சத்தமாக இருக்கிறது. வாக்கு சேகரிக்கும் முறை வாக்களர்களின் காதுகளை துழைத்து வருவாதா மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Tags : electorate ,election campaigns ,
× RELATED திரிபுரா மக்களவை தொகுதியில் 109.9% வாக்குப்பதிவான விநோதம்!