×

குமரி பிஷப்புகள் கிறிஸ்துமஸ் வாழ்த்து கோட்டாறு ஆயர் நசரேன் சூசை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’ ‘மதம் உள்ளிட்ட பிறப்பு அடையாளங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது’ என்று வலியுறுத்தும் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15 மற்றும் 21வது பிரிவுகளுக்கு எதிரானது. இச்சட்டம் இதுவரை மதச்சார்பின்மையில் வாழ்ந்த இந்திய மக்களுக்குப் பெருந்துயரம் தான். எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கையின் வார்த்தையால் இன்றும் நமக்கும் துணிவையும் ஆற்றலையும் தருகின்றன.  இயேசு பிறந்த காலத்தில் பாலஸ்தீனம் ரோமிற்கு அடிமையாக இருந்தது. சாமான்ய மக்கள் வாழ்வை இழந்து நின்றார்கள்.  எங்கிருந்து எனக்கு உதவி வரும் என்று ஏழைகள் ஏக்கத்தோடு கண்களை விண்ணை நோக்கி உயர்த்திய நேரத்தில்தான் அவர்களுக்கு இயேசுவின் பிறப்பு புதுவிடியலின் நம்பிக்கையாய் தரப்பட்டது. இந்த நற்செய்தி இடையர்களுக்கானது மட்டுமல்ல. நூற்றாண்டுகள் எத்தனைக் கழிந்தாலும், ‘உலகில் நன்மனம் கொண்ட அனைவருக்கும்’ என்றுமே நம்பிக்கையின் செய்தியாய் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. வேலையிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. விலைவாசி கட்டுக்கடங்காமல் செல்கிறது.

 பணப்புழக்கமும் மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்திருக்கின்றன. ஆனால் குறிப்பிடும்படியான எண்ணிக்கையிலுள்ள பணக்காரர்களோ செல்வப்பெருக்கில் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சரி செய்யப்படாமலிருக்க மத்திய அரசு மக்களைப் பிளவுபடுத்தி ஆளும் பெருந்துயரம் நம்மை ஆட்கொள்கிறது. நாம் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா உலகில் அனைத்து மக்களும் நிறம், சாதி, மதம், இனம், மொழி கடந்து அன்பு செய்யும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உரக்கக்கூறும் விழா.  இந்த ஆண்டில் கிறிஸ்து பிறப்பு விழா நமக்கும் நம் நாட்டுக்கும் அமைதியோடு கூறிய ஆசியை அருள்வதாக.


Tags : Kumari Bishops ,
× RELATED கடுமையான வெப்பத்தை அனுபவிக்கிறோம்...