×

காரிமங்கலம் மலைக்கோயிலில் பிரதோஷ பூஜை

காரிமங்கலம், டிச.24: காரிமங்கலம் மலைக்கோயிலில் நடந்த பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  காரிமங்கலத்தில் அருணேசுவரர் மலைக்கோயிலில் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை 4 மணிக்கு சிறப்பு ஹோமம், 4.30 மணிக்கு நந்திக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரபகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை அமைச்சர் அன்பழகனின் தலைமையிலான விழாக் குழுவினர், செயல் அலுவலர் சின்னசாமி, மலை கோயில் அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செய்திருந்தனர்.

Tags : Pradosha Pooja ,Karimamangalam Peak ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா