×

திருமங்கலம் நகராட்சியிலிருந்து சிமெண்ட் ஆலைக்கு அனுப்பிய 6 டன் பிளாஸ்டிக் குப்பைகள்

திருமங்கலம், டிச.24: திருமங்கலம் நகராட்சியிலிருந்து 6 டன் பிளாஸ்டிக் குப்பைகள் டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைக்கு லாரி மூலமாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. திருமங்கலம் நகராட்சியில் 57 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் மொத்தம் 242 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் தினசரி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலமாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை நகராட்சி தெற்குதெரு மற்றும் புதுநகரிலுள்ள நுண்உரக்கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. இங்கு இந்த குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பைகள் உரமாக்க மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழவுகளை சேகரித்து அவற்றை அரியலூர் மாவட்டம் டால்மியாபுரத்திலுள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவது என நகராட்சி சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி நேற்று முதல்முறையாக 6 டன் பிளாஸ்டிக் குப்பைகள் டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைக்கு திருமங்கலம் தெற்குதெரு நுண் உரக்கிடங்கிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொ) சுருளிநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் கூறுகையில், நகரில் தினசரி சுமார் 24 மெட்ரிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரிக்கப்படுகின்றன. இதில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது வழக்கம். இதற்காக டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையுடன் ஒப்பந்தம் பெறப்பட்டு தற்போது முதற்கட்டமாக 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சேகரமாகும் மக்காத குப்பைகள் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும் என்றனர்.

Tags : municipality ,cement plant ,Thirumangalam ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு