×

உபயோகிப்பாளர் சங்கத்தினர் வரவேற்பு வலங்கைமான் ஒன்றியத்தில் மணலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டி

வலங்கைமான், டிச.24: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐம்பது கிராம ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மணலூர் ஊராட்சியில் மட்டும் ஊராட்சித்தலைவர் பதவிக்கு அதிகபட்சமாக 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்டக்குழு, 15 ஒன்றியக்குழு, 50 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 342 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. இப்பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து கடந்த 9ம்தேதி முதல் 16ம்தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளில் 217 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து திருவேணமங்கலம், தெற்குபட்டம் உள்ளிட்ட இரண்டு ஊராட்சி தலைவர்கள் மற்றும் 78 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். மொத்தம் உள்ள 408 பதவிகளில் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்ட 80 பதவிகள் நீங்கலாக உள்ள 328 பதவிகளுக்கு தற்போது ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் வரும் 30ம்தேதி நடைபெற உள்ளது.வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் இரண்டு ஊராட்சியில் ஊராட்சித்தலைவர் பதவிகள் போட்டியின்றி தேர்வான நிலையில் மீதமுள்ள 48 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் மொத்தம் 169 வேட்பாளர்கள் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அதில் அதிகபட்சமாக மணலூர் ஊராட்சியில் மட்டும் 10பேர் ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அடுத்தபடியாக 44 ரெகுநாதபுரம் ஊராட்சியில் 6 வேட்பாளர்கள் ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

Tags : members contest ,Manalur ,Valangaiman ,panchayat leader ,
× RELATED ஏழுலோகநாயகி