தனிஷ்க் ஷோரூமில் டைமண்ட் ட்ரீட்ஸ்

சென்னை, டிச.22: டிசம்பர் மாதம் விழாக்கள் நிறைந்தது என்பதால், இந்த மாதத்தில் வைரங்களை வாங்குவது, அணிவது மற்றும் பரிசளிப்பது வழக்கம். வைரம் வைத்திருப்பது ஒருவரை சிறப்பு மிக்கவராகவும், தனித்துவமானவராகவும் உணர வைக்கிறது. இதையொட்டி, தனிஷ்க் ஷோரூமில் ‘டைமண்ட் ட்ரீட்ஸ்’ மூலம் சிறந்த மற்றும் பாரம்பரிய வடிவமைப்பில் மோதிரம், காதணிகள் மற்றும் நேர்த்தியான சங்கிலி பதக்கங்கள் 15 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இதுகுறித்து டைட்டன் நிறுவனத்தின் நகை பிரிவு சந்தைப்படுத்துதல் பிரிவு பொது மேலாளர் ரஞ்சனி கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘வைரங்கள் விலைமதிப்பற்றவை, அழகானவை மற்றும் சாசுவதமானவை.

வைர நகைகளை சொந்தமாக வாங்கி, அலங்கரித்துக்கொண்டு அழகு பார்க்கும் பெண்களின் போக்கு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இந்த டைமண்ட் ட்ரீட்ஸில் குறைந்த விலை மற்றும் பரந்த தொகுப்புகள் மூலம் அனைவரும் அணுகக்கூடிய விதத்தில் வைர நகைகள் உள்ளன. பொதுமக்கள் எதிர்பார்க்கும் வைர நகைகள் நிறம், தெளிவு, கேரட், வெட்டு மற்றும் சிறந்த வகைகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும்,’ என்றார்.

Related Stories:

>