×

போச்சம்பள்ளியில் இளங்கோவன் பிறந்தநாள் விழா

போச்சம்பள்ளி, டிச.22:போச்சம்பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் 71வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் கவுன்சிலர் பெருமாள் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட விவசாய தலைவர் ராமநாதன், ஒன்றிய பொறுப்பாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மாது, கடம்பகணேசன், சபரிநாதன், கார்த்திக் முனுசாமி, அர்ஜூனன், நவாப், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ilangovan ,Birthday ,Pochampally ,
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி