×

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 19: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தஞ்சையில் காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு நாடு முழுவதும் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று தஞ்சை ரயிலடி முன் காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாணவர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜீவா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது குடியுரிமை சட்ட மசோதா இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.மேலும் டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் நடத்தி கொடுமையான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Tags : Cauvery Plains Protection Movement ,Citizenship Amendment Bill ,
× RELATED குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு...