×

வெங்கடசுப்பா ரெட்டியார் சிலைக்கு தலைவர்கள் மாலை

புதுச்சேரி, டிச. 19: புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் 110வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மறைமலையடிகள் சாலை- கடலூர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு வைத்திலிங்கம் எம்பி, துணை சபாநாயகர் பாலன், விஜயவேணி எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நெட்டப்பாக்கம்:இதேபோல் மடுகரையில் விடுதலை போராட்ட தியாகியும், முன்னாள் முதல்வருமான வெங்கடசுப்பா ரெட்டியாரின் 110வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மடுகரையில் உள்ள அவரது சிலைக்கு அவரது மகனும், எம்பியுமான வைத்திலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மடுகரையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரதான்மந்திரி ஆயுஸ்மான் திட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ அட்டையை வைத்திலிங்கம் எம்பி வழங்கினார்.

விழாவில் காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருணாகரன் மற்றும் கந்தவேலு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகளை ஏழைகளுக்கு எம்பி மற்றும் விஜயவேணி எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து தொகுதியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் பிரமுகர் அம்மைநாதன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...