×

தாராபுரம், உடுமலை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவிற்கு ஒதுக்கீடு

கோவை,டிச.19: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்களுக்கான வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தாரபுரம், உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய நகராட்சிகளின் தலைவர் பதவி  பெண்கள் பொது பிரிவிற்கும், வால்பாறை, உதகமண்டலம், குன்னூர் ஆகிய நகராட்சிகளின் தலைவர் பதவி பட்டியலின பெண்கள் பிரிவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன அதேபோல நீலகிரி மாவட்டத்தின் நெல்லியாளம் நகராட்சி தலைவர் பதவி பட்டியலின பொது பிரிவினருக்கும், கூடலூர் நகராட்சி பழங்குடியின பெண்கள் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags : Udumalai ,Mettupalayam ,Pollachi Municipality ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு