×

திருப்புவனம் ஒன்றியத்தில் 383 பதவிகளுக்கு 1,206 பேர் போட்டி

திருப்புவனம், டிச.18: திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த வாக்காளர்கள் 77 ஆயிரத்து 429 உள்ளனர். இதில் 45 ஊராட்சி தலைவர்கள், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 318 சிற்றூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 382 பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு கடந்த 9ந் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கி 16ந் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று அனைத்து வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் மாவட்ட ஊராட்சி 12,13 இரண்டு வார்டுகளுக்கு 19 பேர் போட்டியிடுகின்றனர்.45 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 238 பேரும், 17ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 127 பேரும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்பதவிகளுக்கு 822பேரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 382 பதவுகளுக்கு 1206 போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.

Tags : contestants ,
× RELATED மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி கோவை...