×

இளையான்குடி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்

இளையான்குடி, ஏப்.30: இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாலைக்கிராமம், சாத்தனூர், சமுத்திரம், விரையாதகன்டன், அளவிடங்கான், கரும்பு கூட்டம், கோட்டையூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதம் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ பருத்தி ரூ.105 முதல் 110 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு நல்ல விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் நடப்பாண்டில் அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் பருத்தி கிலோ ரூ.80க்கு கொள்முதல் செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறைந்து ஏப்ரல் இறுதி வாரத்தில் தற்போது ஒரு கிலோ பருத்தி பஞ்சு ரூ.60க்கு குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை வீழ்ச்சியால் பருத்தி விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி பஞ்சு விலை வீழ்ச்சிக்கு, கோவை மற்றும் திருப்பூர் பஞ்சு நூற்பாலைகள் கொள்முதல் செய்யாததே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post இளையான்குடி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Ilaiyankudi ,Ilayayankudi ,Saaligram ,Chatanur ,Samudram ,Virayathakandan ,Kulanangan ,Karumbu Kutam ,Kotayur ,Dinakaran ,
× RELATED 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்