×

பொதுமக்கள் கருத்து ராயனூர் பகுதியில் தார்ச்சாலைகளை சரியாக அமைக்காததால் விபத்து

கரூர், டிச. 18: ராயனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலைகள் சரியாக அமைக்காத காரணத்தினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் இருந்து ஒத்தையூர், செல்லாண்டிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பழைய சாலைகள் தார்ச்சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் சாலையோரத்தை மண் கொண்டு நிரப்பாமல் விட்டு விட்டதால் இரவு நேரங்களில் இதன் வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர். இதுபோன்ற சமப்வங்கள் அடிக்கடி இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது.

சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாத அளவுக்கு முட்செடிகள் வளர்ந்துள்ளதால் பள்ளம் இருப்பதை அறியாமல் பலர் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மண் மட்டுமே ஒரிடத்தில் கொட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது.எனவே வாகன விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோர பள்ளங்களை மண் கொண்டு சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 20 ஆயிரம் டன் அளவுக்கு மீன் உற்பத்தி செய்யலாம். ஏரியின் வெளிப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் உள்ளதால் பறவைகள் சரணாலயம், பூங்கா அமைத்து படகு குழாம் அமைப்பதன் மூலமாக சுற்றுலாத்தலமாகவும் ஆக்க இயலும்.

Tags : area ,Rayanur ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது