×

எஸ்எஸ்எல்சி தேர்வில் 94% தேர்ச்சி; 21 அரசு பள்ளிகள் சதம் அடித்தது: வழக்கம்போல் மாணவிகள் முதலிடம்

கரூர், மே 11: மாநில அளவில் 13வது இடத்தை பெற்றுள்ளது எஸ்எஸ்எல்சி தேர்வில் 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம் போல் மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 21 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.நேற்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் படி கரூர் மாவட்டத்தில் 93.59 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 190 பள்ளிகளில் இருந்து 5617 மாணவர்கள், 5749 மாணவிகள் என மொத்தம் 11366 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். நேற்று தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கரூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளின்படி 5,133 மாணவர்கள், 5,505 மாணவிகள் என மொத்தம் 10,638 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.59 ஆக உள்ளது.

இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தின் படி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 91.38 ஆகவும், மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.76 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் 87.24 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.12 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.70 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன. இதில், 21 பள்ளிகள் அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்ச்சியில் மாநில அளவில் 13வது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 91.49ல் இருந்து தற்போது 93.59 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன. இதில், 21 பள்ளிகள் அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்ச்சியில் மாநில அளவில் 13வது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 91.49ல் இருந்து தற்போது 93.59 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post எஸ்எஸ்எல்சி தேர்வில் 94% தேர்ச்சி; 21 அரசு பள்ளிகள் சதம் அடித்தது: வழக்கம்போல் மாணவிகள் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : SSLC ,Dinakaran ,
× RELATED எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்