×

பாப்பிரெட்டிப்பட்டியில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.17: பாப்பிரெட்டிபட்டி வட்டாரத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் மூலம், மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சி, அதிகாரப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் தலைமை தாங்கினார்.     வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளார் சண்முகம், மக்காசோளத்தில் படைப்புழு தாக்குதல், அதன் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக கூறினார்.  

வேளாண் விஞ்ஞானி சங்கீதா, ஒருங்கிணைந்த முறையில் படைப்புழு கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் திருநாவுக்கரசு, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள் பற்றி விளக்கினர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், தமிழரசி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : plague attack ,
× RELATED சோளத்தில் படைப்புழு தாக்குதலை...