×

கோரம்பள்ளம் ஊராட்சி சுப்பிரமணியபுரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தூத்துக்குடி, டிச. 17:கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.சுப்பிரமணியபுரத்தில் செயல்படும் தூ.நா.தி.அ.க. துவக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தலைமை வகித்த சேகர குரு அருட்திரு ஜெபாஸ் ரஞ்சித் தனராஜ், கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். தலைமை ஆசிரியை மெர்லின்   அற்புதவல்லி வரவேற்றார். கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,   மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடந்த கிறிஸ்து பிறப்பு நாடகம்   உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர். உட்பட பலர் பங்கேற்றனர். உதவி ஆசிரியை செல்வராணி தங்கத்தாய் நன்றி கூறினார்.

Tags : Christmas Celebration ,Subramaniyapuram School ,
× RELATED வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி...