×

தூத்துக்குடி மாநகரில் பதுக்கிவைத்து மது விற்ற பார் தொழிலாளி கைது

தூத்துக்குடி, ஜூன் 23: தூத்துக்குடி மாநகரில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்ற பார் தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ அஜய்ராஜா நேற்று முன்தினம் தூத்துக்குடி சிவந்தாகுளம் டாஸ்மாக் அருகே ரோந்து பணிக்கு சென்றார். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து அவர் விசாரித்தார்.

அதில் அவர் அருகிலிருந்த டாஸ்மாக் பார் தொழிலாளி என்பதும், திருச்செந்தூர் ரோடு, சத்யாநகர் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் முருகன்(55) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 45 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். முருகன் மீது ஏற்கனவே தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களில் 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடி மாநகரில் பதுக்கிவைத்து மது விற்ற பார் தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,South SI ,Ajairaja ,Sivanthakulam Tasmac ,
× RELATED இருசக்கர வாகனங்களில் தனியாக...