×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.16: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ேநற்று கரும்பு அரவை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஆலை மேலாண்மை இயக்குனர் அஜய் சீனிவாசன் தலைமை வகித்து கரும்பு அரவையை தொடங்கி வைத்தார். இதில் 2019-20 நடப்பாண்டிற்கான ஆலைக்கு சொந்தமான 60ஆயிரம் டன் கரும்பு மற்றும் பாலக்கோடு சர்க்கரை ஆலை பதிவு கரும்பு 15 ஆயிரம் டன் என மொத்தம் 75 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட உள்ளது. மேலும் நடப்பாண்டில் விவசாயிகளின் கரும்புக்கு, டன் ஒன்றுக்கு ₹2915 வழங்கபட உள்ளது. மேலும் கடந்த 2018-19ம் ஆண்டில், கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்குக்கு ₹137.50 அவரவர் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலைக்கு கரும்புகளை ஏற்றி வர லாரி, டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்ட வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டில் 4 லட்சத்து 30 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய உத்தேசிக்கப்பட்டு, 14,500 ஏக்கர் கரும்பு நடவு செய்ய விவசாயிகளை ஊக்கபடுத்தி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், பொறியாளர் ரவிசந்திரன்     மணிமாளன், தொழிலாளர் நல அலுவலர் ஜெய்சங்கர், அலுவலக மேலாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags : Co-operative Sugar Factory ,Papyrepatti ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி