ரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய 4வது நடைமேடையில் இருந்து காரைக்குடிக்கு நேற்று மாலை 3.45 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அப்போது, வாலிபர் ஒருவர் ஓடிவந்து அதில் ஏற முயன்றபோது நிலை தடுமாறி ரயிலுக்கும், தண்டவாளத்துக்கு இடையே கீழே விழுந்தார்.

பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் ஏஎஸ்ஐ கிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபரை வெளியில் இழுத்து காப்பாற்றினார். பின்னர் அவரிடம் இதுபோன்று ரயில் புறப்பட்டு செல்லும் போது ஓடிவந்து ரயிலில் ஏறக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். வாலிபரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரரை ரயில்நிலையத்தில் இருந்த பயணிகள் பாராட்டினர்.

Related Stories:

>