×

தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த சத்யநாராயணன்

திருச்செங்கோடு, டிச. 13: நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலுக்கு நேற்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் வந்தார். அவரை ரஜினி ரசிகர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் தங்கத்தேர்  இழுத்தார். தொடர்ந்து  அர்ச்சகர்கள் அவருக்கு பரிவட்டம் கட்டினர். தொடர்ந்து  அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு  சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. சத்யநாராயண ராவ் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து ரஜினி பிறந்தநாளையொட்டி, பொதுமக்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,எனது தம்பியின் பிறந்த நாளுக்கு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு,நலஉதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனது தம்பி மீது, அளவற்ற பாசத்தை பொதுமக்கள் காண்பிக்கின்றனர். ரஜினி கட்சி துவக்குவது உறுதி. எப்போது என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

Tags : Sathyanarayanan ,
× RELATED திண்டுக்கல்லில் போதை இல்லாபாரதம் விழிப்புணர்வு