×

சித்தேரி ஊராட்சியில் சிறுவர் பூங்காவை திறக்க வலியுறுத்தல்

அரூர், டிச.12: அரூர் அருகே சித்தேரி ஊராட்சியில், பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும், உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்காவை திறக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் அருகே சித்தேரி ஊராட்சியில், கலசப்பாடி, நொச்சிக்குட்டை உள்ளிட்ட 63 கிராமங்கள் உள்ளது. இக்கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின் உடல் திறனை வளர்க்கும் நோக்கத்திற்காக, கடந்த 2016ம் ஆண்டு, 30 லட்சம் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஒருங்கிணைந்த அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது. பல லட்சம் செலவில் வாங்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தாததால், தற்போது துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அருகில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும், புதர் மண்டி, விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே கடந்த 4ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் சிறுவர் பூங்௧ா மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, பயன்பாட்டிற்கு திறக்க ேவண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : opening ,park ,children ,Siddheri ,
× RELATED முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!