×

பாவூர்சத்திரத்தில் மழைக்கு வீடு இடிந்தது

பாவூர்சத்திரம், டிச.10: பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக வட கிழக்கு பருவ  மழை  பெய்து வருகிறது.  பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் இசக்கிமுத்து ( 49) கூலி தொழிலாளி. இவரது மனைவி சமுத்திரக்கனி பீடிதொழிலாளி. இவர்களுக்கு  ஒரு மகனும்  3 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது இதில் இவரது வீட்டின் ஒரு பகுதி சுவர்  இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமடைந்த வீட்டை  பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.

Tags : house ,Bausara Sastra ,
× RELATED டெல்லியில் ஒன்றிய அமைச்சர் வீடு முற்றுகை..!!