×

அரவக்குறிச்சி அம்மாபட்டியில் நடந்த சிறப்பு குறை தீர் முகாமில் மனுக்கள் மீது உடனடி தீர்வு

அரவக்குறிச்சி, டிச. 4: அரவக்குறிச்சி ஒன்றியம் அம்மாபட் டியில் வருவாய் துறையின் சார்பில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.அரவக்குறிச்சி ஒன்றியம் அம்மாபட்டியில் நடைபெற்றபொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு அரவக்குறிச்சி சிறப்பு திட்ட தனி தாசில்தார் ரவிகுமார் தலைமை தாங்கினார். தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார். அப்பகுதி பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 25 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 5 மனுக்களுக்கு முகாமில் உடனடியாக தீர்வளிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு தீர்வளிக்கப்பட உள்ளது.பள்ளபட்டி வரி ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் தாரணி முகாம் ஏற்படுகளை செய்திருந்தனர். நோயாளிகளுக்கு சுகாதாரத் துறையினர் இலவச மருத்துவ சிகிச்சையும், கால்நடை துறையினர் விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சையும் அளித்தனர்.


Tags : petitions ,grievance camp ,Aravakurichi Ammapatti ,
× RELATED 3 நாள் நடந்த ஜமாபந்தி நிறைவு மக்களிடம் இருந்து 353 மனுக்கள் குவிந்தன