×

பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மீன் அங்காடி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கரூர், ஜூன் 20: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மீன் மார்க்கெட் வளாகம் செயல்பட்டு வந்தது. இங்கு கடல், டேம், ஆறு போன்ற அனைத்து வகையான மீன்களும் வாரந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் அதிகளவு பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மீன் வகைகளை வாங்கிச் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் அனைத்து மீன் கடைகளும் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, மீன் அங்காடி அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மீன் அங்காடி வளாகம் அமைக்கும் பணிகளை முடித்து, ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் வளாகம் விரைந்து செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மீன் அங்காடி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Periyakulamthupalayam ,Karur ,Periyakulatuppalayam ,Karur Corporation ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...