×

கரூரில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

கரூர், ஜூன் 21: புதிய சட்ட அமலாக்கத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கரூர் பார் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் நகுல்சாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோபால், நாகேஸ்வரன், ரமேஷ் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசே, குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும்ப பெற வேண்டும். புதிய சட்ட அமலாக்க த்தை உடனடியாக நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post கரூரில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Lawyers Association ,Karur ,Karur Bar Association ,Bar Association ,Nakulsamy ,Karur Integrated Court ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து...