×

அரூரில் பட்டுவளர்ச்சி கட்டிடத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

அரூர், டிச.3: அரூர் பேரூராட்சி 14வது வார்டு அம்பேத்கர் நகரில், சுமார் 40 ஏக்கர் பரப்பில் தமிழ்நாடு அரசு பட்டுவளர்ச்சி துறை சார்பில், பயிற்சி பண்ணை அமைக்கப்பட்டது. இங்கு பட்டுப்பூச்சி வளர்த்து, அதிலிருந்து நூல் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை ஏராளமானோர் பெற்று வந்தனர். சில ஆண்டுகள் நன்றாக இயங்கி வந்த பின்னர், 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. இங்கு நான்கு கட்டிடங்கள், 2 விவசாய கிணறுகள் உள்ளது. எவ்வித தொழிற்சாலையும் இன்றி இப்பகுதி மக்கள் வெளி மாநிலங்களில் வேலை புரிய குடும்பத்துடன் செல்லும் நிலையில், அரசு நிலம் போதுமான தண்ணீர் வசதியுடன் வீணாகி வருகிறது. பல ஆண்டுகளாகவே தரிசாக கிடப்பதால், முட்புதர்கள் வளர்ந்துள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில், சிறு குறு தொழிலை இங்கு ஏற்படுத்தவும், கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : aquarium building ,Aurora ,
× RELATED அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம்...