×

தேன்கனிக்கோட்டையில் சாலை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, டிச.3:  தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்கத்தின் வட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில பொருளாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.  மாநில தலைவர் அர்ச்சுனன் பங்கேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் மரியாஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய வட்ட தலைவராக கேசவன், செயலாளராக அன்வர்பாஷா, பொருளாளராக பரமேஷ், துணை தலைவராக சீனிவாசன், இணை செயலாளராக முருகேசன், கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வறைமுறைபடுத்தி, அதற்குண்டான ஊதியத்தை வழங்க வேண்டும், சாலை பணியாளர்கள் ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், தேவையான தளவாட கருவிகள் மற்றும் மழை காலங்களில் பணிபுரிய குளிர் பாதுகாப்பு ஆடைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Road Workers Union General Committee Meeting ,
× RELATED திருச்செந்தூரில் சாலை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்