×

திருச்செந்தூரில் சாலை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்செந்தூர், பிப். 4: தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சாலைப்பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருச்செந்தூரில் நடந்தது. மாவட்ட தலைவர் தேரிலிங்கம் தலைமை வகித்தார். சந்திரசேகர், ஒலிமுத்து பெருமாள், குமார், செந்தில்குமார், அர்ச்சுணன், குமரேசன், ஜான்பிச்சை, சுரேஷ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு மாநில அமைப்பாளர் எட்வர்டுஜெபசீலன், பொதுக்குழுவை துவக்கி வைத்தார்.
மாநில தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் செல்லப்பாண்டி, துணை தலைவர் சுடலை, கவுரவ தலைவர் சித்தையன், ஏஐடியுசி சட்ட ஆலோசகர் வக்கீல் நடேசஆதித்தன், முன்னாள் மாநில குழு உறுப்பினர் ஜெயக்குமார், டிஎன்ஜிஇயு மாவட்ட செயலாளர் சாதகன், நெல்லை மாவட்ட தலைவர் வெள்ளத்துரை, பொருளாளர் சத்தியவேல், செயற்குழ உறுப்பினர் தினகரன் ஆகியோர் பேசினர்.  

கூட்டத்தில் 2002ம் ஆண்டில் சாலை பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாதத்தை பணி வரன்முறை செய்து ஓய்வூதியத்தில கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசாணைப்படி தர ஊதியம் ரூ.1300ல் இருந்து ரூ.1900 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் கல்வித்தகுதி அடிப்படையில் சாலை பணியாளர்களை நியமிக்க வேண்டும் மற்றும் திருச்செந்தூர் கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீட்டு பணிகளில் சாலைப்பணியாளர்களை ஈடுபடுத்துவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.

Tags : Road Workers Union General Committee Meeting ,Thiruchendur ,
× RELATED திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள்: பக்தர்களுக்கு தோளில் எரிச்சல்