×

யோகா போட்டியில் கெய்ன்ஸ் பள்ளி சாதனை

நெல்லை, டிச.3: பள்ளி களுக்கிடையேயான  யோகா போட்டியில் கெய்ன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை  படைத்தனர். ரா க் டான்ஸ் அகாடமி நடத்திய பள்ளிகளுக்கு இடையிலான யோகா போட்டி கூடங்குளம் ஹார்டுவேர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கெய்ன்ஸ் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் 68, சிபிஎஸ்இ பள்ளியில் 76 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பங்கு பெற்ற அனைவரும் முதல், இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரையும் பள்ளி தாளாளர்கள் செல்வநாயகம், வசந்தா செல்வநாயகம், முதல்வர் சாம்டேவிட் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED குண்டாசில் இருவர் கைது