×

அதிகாரிகள் அதிரடி கீரங்கோட்டம் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு

திருவாரூர், டிச.3: கொரடாச்சேரி அருகே உள்ள கீரங்கோட்டம் கிராமத்தில் ஐம்பொன்னாலான அம்மன் சிலையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கீரங்கோட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று இருந்து வருகிறது. ஊர் கோயிலான இக்கோயிலில் ஒன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்று இருந்தது. இந்நிலையில் நேற்று காலை அவ்வூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கோயிலுக்கு சென்றபோது கோயிலின் உள்ளே கருவறை கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்து ஊர் பொதுமக்கள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த அம்மன் சிலை மாயமாகியிருந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து கொரடாச்சேரி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Tags : Imbon ,Action Kerakottam Temple ,
× RELATED மணலி அருகே 1200 ஆண்டுகளுக்கு முந்தைய...