×

மழைநீரால் வெள்ளப்பெருக்கு பாமணி ஆற்றின் கரை அவசர அவசரமாக சீரமைப்பு

முத்துப்பேட்டை, டிச.1: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கடந்த 3 தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, மரைக்காகோரையாறு, கிளந்தாங்கி ஆறுகள் உட்பட அனைத்து ஆறுகளிலும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதி ஆறுகளை கடந்த ஆண்டுகளில் தூர் வராததால் கரைகளை உயர்த்தி கட்டாததால் இன்னும் இரண்டொரு நாள் மழை நீடித்தால் அனைத்து ஆறுகளிலும் உடைப்புகள் ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளது.இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பாமணி ஆறு மங்கலூர் பகுதி கரை சரிவர இல்லாததால் ஆறு உடைப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியினர் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் பொதுப்பணித்துறை அலுவலர்களை வரவழைத்து அப்பகுதி பணியாளர்களை கொண்டு உடன் முழுவீச்சில் சரி செய்யப்பட்டது.

Tags : Pamani River ,
× RELATED ஆதிதிராவிடர், பழங்குடியினர்...