×

கிராமத்தில் போதை பழக்கத்திற்கு உள்ளான பி.சி, எம்.பி.சி வகுப்பை சேர்ந்தவர்கள் அரசு விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 27: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பி.சி மற்றும் எம்.பி.சி வகுப்பை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மற்றும் மாணவிகளுக்காக 28 விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் 14 விடுதிகள் பள்ளி மாணவர்களுக்கும், 7 விடுதிகள் பள்ளி மாணவிகளுக்கும், 2 விடுதிகள் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கும், 5 விடுதிகள் மாணவிகளுக்கும் செயல்பட்டு வருகின்றன.

கல்லூரி விடுதிகளில் பாலிடெக்னிக், ஐடிஐ, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்-கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜுலை) 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்கவேண்டும். மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களைஅளிக்கலாம். எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post கிராமத்தில் போதை பழக்கத்திற்கு உள்ளான பி.சி, எம்.பி.சி வகுப்பை சேர்ந்தவர்கள் அரசு விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : MPC ,Tiruvarur ,Collector ,Charu ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த...