×

பூங்காவில் குவியும் மாணவர்கள் கல்வி சுற்றுலாவால் களைகட்டுகிறது

ஊட்டி, டிச. 1: அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் கல்வி சுற்றுலா வரும் நிலையில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் மக்கள் கூட்டத்தால் களை கட்டுது.நீலகிரியில் கடந்த மாதத்துடன் இரண்டாம் சீசன் முடிந்த நிலையில், நவம்பர் மாதம் முழுக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் கல்வி சுற்றுலா வாகனங்கள் அதிகளவு வருகின்றன. வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா தலங்களை முற்றுகையிடுகின்றனர்.
இதனால், வார விடுமுறை நாட்களில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்கள் களை கட்டுகிறிது.
இவர்கள் மலை ரயிலில் பயணிக்கு ஆர்வம் காட்டுவதால், மலை ரயிலும் நிரம்பி வழிகிறது. நேற்றும் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா ேபான்ற பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags : park ,
× RELATED கோடை விழா: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறந்திருக்கும்