டூவீலர் விபத்தில் தந்தை பலி, மகன் படுகாயம்

திருமங்கலம், டிச.1:  திருமங்கலத்தில் டூவீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்தார். படுகாயமடைந்த மகன் சிகிச்சை பெற்று வருகிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜேசுராஜ்(50). இவரது மகன் ராஜ்பரத்(23). நேற்று முன்தினம் இருவரும் சிவகாசியில் இருந்து திண்டுக்கல்லுக்கு டூவீலரில் சென்றுள்ளனர். திருமங்கலம் குதிரைசாரிகுளம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராவிதமாக ராஜ்பரத் பிரேக் போடவே டூவீலர் கவிழ்ந்தது. இதில் படுகாயடைந்த இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் ஜேசுராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜ்பரத் சிகிச்சை பெற்று வருகிறார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>